எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி நேற்று திங்கட்கிழமை தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்தார்.
அவர் மீண்டும் பாராளுமன்றம் வருவதற்காகவே பதவியை இராஜிநாமாச் செய்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத் ஆகியோருடன் எம்.பி. பதவிகளை இராஜிநாமாச் செய்திருந்தார்.
ஹஸன் அலி எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.