கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினரெனச் சந்தேகிக்கப் படும் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை "சயனைட்' உட்கொண்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை மூர் வீதியிலேயே நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இவர் "சயனைட்' உட்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தகவலொன்றின் பேரில், வீடொன்றிலிருந்த இவரை பொலிஸார் கைது செய்யச் சென்ற போதே இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பின்னர் இவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.