Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, July 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஐ.பி.எல்.க்கு போட்டியாக இங்கிலாந்தும் "ருவென்ரி20' போட்டிகளை நடத்தும்
[15 - July - 2008] [Font Size - A - A - A]
ஐ.பி.எல்.க்கு போட்டியாக புதிய லீக் போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபை தொடங்கிய ஐ.பி.எல். நடத்திய 20 ஓவர் போட்டிகள் மாபெரும் வெற்றி பெற்றன. இதனையடுத்து உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஐ.பி.எல்.க்கு போட்டியாக புதிய லீக் போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை பற்றிய விபரம் இங்கிலாந்து பத்திரிகைகளில் கசிந்துள்ளது.

9 அணிகளாக பிரிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள 9 டெஸ்ட் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் உள்நாட்டு வீரர்களும் இடம்பெறுவார்கள். வீரர்கள் ஏல அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 2010 ஆம் ஆண்டில் இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.

பரிசுத் தொகையாக கோடிக்கணக்கான ரூபா வழங்கப்படவுள்ளது. இங்கிலாந்து பிரிமியர் லீக் என்னும் பெயரில் இந்தப் போட்டிகள் நடத்தப்படலாமெனத் தெரிகிறது.

Email this page Your Opinion Print this page
இலங்கையுடனான போட்டித் தொடரில் சிறப்பாக ஆடுவேனென்கிறார் சச்சின்
ஐ.பி.எல். போட்டியின் போது ஆசிப் ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் கண்டுபிடிப்பு?
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வெடுத்த தோனியின் முடிவு மிகவும் துணிச்சலானது
அடுத்த வருடம் ஐ. பி. எல். போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியில்லை
ஐ.பி.எல்.க்கு போட்டியாக இங்கிலாந்தும் "ருவென்ரி20' போட்டிகளை நடத்தும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com