Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, July 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அடுத்த வருடம் ஐ. பி. எல். போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியில்லை
[15 - July - 2008] [Font Size - A - A - A]
இந்தியாவில் நடக்கும் ஐ.பி,எல்.,போட்டிகளில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி. சி. பி.) தலைமை இயக்குநர் சவுகத் நக்மி கூறியதாவது;

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாகிஸ்தானில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளதால், இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க இயலாது. ஐ.பி.எல். என்பது உள்ளுர் கிரிக்கெட் தான். நாங்கள் ஐ.சி.சி. விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவதில் உறுதியாக உள்ளோம்.

ஐ.பி.எல். இதற்கு விதிவிலக்கல்ல. நீண்ட இடைவெளிக்குப்பின் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் வருவதற்கு சம்மதித்துள்ளது. மற்ற போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது அவர்களது உள்விவகாரம். ஐ.பி.எல். ண்ஒப்பந்தத்தில் சேரும் முன்பாக எங்களது வீரர்களிடம் தேசிய கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என கூறியுள்ளோம்.

தற்போது அவுஸ்திரேலிய தொடரை நல்ல படியாக நடத்துவதைத் தவிர வேறொன்றுமில்லையெனவும் சவுகத் நக்மி கூறினார்.

பி.சி.பி., யின் இந்த அறிவிப்பால் தன்வீர்,கம்ரன் அக்மல், யூனிஸ்கான், மிஸ்ப்பா உல்ஹக் உள்ளிட்ட 12க்கு மேற்பட்ட வீரர்கள் ஐ.பி.எல்.தொடரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
இலங்கையுடனான போட்டித் தொடரில் சிறப்பாக ஆடுவேனென்கிறார் சச்சின்
ஐ.பி.எல். போட்டியின் போது ஆசிப் ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் கண்டுபிடிப்பு?
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வெடுத்த தோனியின் முடிவு மிகவும் துணிச்சலானது
அடுத்த வருடம் ஐ. பி. எல். போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியில்லை
ஐ.பி.எல்.க்கு போட்டியாக இங்கிலாந்தும் "ருவென்ரி20' போட்டிகளை நடத்தும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com